Show all

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி: சிவசேனா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தேசிய பணி என்று கூறியுள்ள சிவசேனா, ராமரின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வந்தவர்கள், கோவில் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சிவசேனா,

ராமர் கோவில் கட்டுவது  தேசிய பணி ஆகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நமது கடவுள் ராமர் நாடுகடத்தப்பட்டவர் போல  சிறிய கூடாரம் போன்ற கோவிலில் வாழ்ந்து வருகிறார். ராமர் கோவிலின் இத்தகைய நிலைக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் வெட்கப்பட வேண்டும். ராமரின் ஆசிர்வாதத்தால் ஆட்சிக்கு வந்துள்ளவர்களும், முக்கிய பதவிகளை வகிப்பவர்களும், இந்த நிலையை மாற்றுவதை உறுதி செய்யவேண்டும்.

பல ஆண்டுகளாக தேர்தல் நேரங்களில் இந்த விவகாரத்தில் மிகவும் ஆர்வமான சூழலை நாம் காண்கிறோம். மீண்டும் ஒரு முறை இதை நாம் காண நேர்ந்துள்ளது. மீண்டும் ஒருமுறை கற்கள் அங்கு இறக்கப்பட்டுள்ளது. கடந்த 20-25 ஆண்டுகளாக அயோத்திக்கு கொண்டு சென்று செதுக்கப்படும் கற்களின் நிலை என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ராமர் கோவில் கட்டுவது தேவையான ஒன்று. ஆனால், இதற்காக கற்களை செதுக்கி வைப்பது தேவையில்லாத ஒன்று. கோவில் கட்டும் தேதியை அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்  இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.