Show all

அரசுவேலைக்கான வாய்ப்பை, இழந்தபெண்! உரிய நேரத்தில் அஞ்சல் கொடுக்காத அஞ்சல் துறை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அஞ்சல் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு இருந்தும், பெண் ஒருவருக்கு உரிய நேரத்தில் கடிதம் ஒன்றை விநியோகிக்காத காரணத்தால் அவர் அரசு வேலையை இழந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தலைமை அஞ்சல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரைச் சேர்ந்தவர் சோமசுந்தரத்தின் மகளான வித்யா அறிவியல் இளவல் பட்டப் படிப்பை முடித்துள்ளார். பட்டதாரியான இவர் தமிழக நில அளவை பதிவேடுகள் துறையின் பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வித்யாவிற்கு நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் 28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119; திங்கட் கிழமை அன்று (12.03.2018) அனுப்பப்பட்டு, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு புதன் கிழமை வந்துள்ளது. அக்கடித்தில் வௌ;ளிக் கிழமை காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அஞ்சல் துறையோ இந்த கடிதத்தை வெள்ளிக்கிழமை  மதியம் 1.40-க்கு தான் வித்யாவிடம் விநியோகித்துள்ளது. கடிதத்தை பிரித்து பார்த்து அதிர்ச்சியடைந்த வித்யா கண்ணீர் விட்டுள்ளார். தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அரசு வேலைக்கான வாய்ப்பு இப்படி அஞ்சல் துறையினரின் அலட்சியத்தால் தவறிவிட்டதே என வருந்தியுள்ளார். இதனையடுத்து உரிய நேரத்தில் கடிதம் கிடைக்காததால், தனது அரசுப்பணி வாய்ப்பு பறிக்கப்பட்டதாக மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

அரசுத் துறைகளிலேயே அஞ்சல் துறைக்கு என்று தனிமரியாதை இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அஞ்சல் துறை சிறந்திருந்த காலத்தில் நாள் ஊதியத்தில் பயிற்சி அஞ்சலர்கள்தாம் பொறுப்பான பெயரை அஞ்சல் துறைக்கு பெற்றுத் தந்திருக்கிறார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,730.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.