Show all

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல்தகனம்! 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சன்னியாசிதோப்பில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. 

தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபஞ்சன் 46 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் தெலுங்கு, இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் இலக்கியத்துறையில் 57 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவுக்கு பல இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். 

தனது வாழ்க்கை முழுவதும் தமிழ் இலக்கியத்துறைக்காக அர்பணித்த பிரபஞ்சன், ஹந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வானம் வசப்படும் என்ற, வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த நூலுக்காக மத்திய அரசு தமிழின் சாக்திய அகாடமி விருதை அறிவித்தது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.