Show all

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் நடுவண் அரசு திணறி வருகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தில்லியில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மோடி அரசை எவ்வளவு நாட்கள் கட்டுக்குள் வைத்து இருந்தது என்பது கடந்த வாரம் வெளிப்படையாக தெரிந்து விட்டது என்றார்.

தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் மற்றும் கிராம மக்கள் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார்கள். பிரதமரின் பேச்சு மட்டும் தான் இருக்கிறது. செயல்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

விவசாயிகளின் நிலங்களை பறிப்பதில் அரசு மிகுந்த அக்கறை செலுத்துகிறது. நில சட்ட திருத்த மசோதா தொடர்பாக வருகிற 20-ந்தேதி பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம், இவ்வாறு சோனியா தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.