Show all

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு 4 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்குத் தடை.

ஜெயின் மதத்தினரின் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்களுக்கு மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனெவே மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பிறப்பிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பர்யுசான் என்ற பண்டிகையையொட்டி 10 நாட்கள் விரதம் இருப்பார்கள். இதையொட்டி மிராபயந்தர் பகுதியில் 8 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து மிராபயந்தர் மாநகராட்சி உத்தரவிட்டது. இந்தநிலையில் மும்பையிலும் இறைச்சிக்கு தடை விதிக்குமாறு பா.ஜனதா கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வரும் 10  13, 17 மற்றும் 18-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த அறிவிப்பில், ”தடை விதிக்கப்பட்ட 4 நாட்களுக்கு இறைச்சிக் கடைகள் திறக்கக் கூடாது. எந்த விலங்குகளையும் கொல்லக் கூடாது. விற்பனையும் கூடாது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மாநகராட்சியின் இந்த உத்தரவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.