Show all

பாஜகவினர் எதிர்ப்புக்குள்ளான பத்மாவதி திரைப்படம்

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜஸ்தானின் சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ‘பத்மாவதி திரைப்படத்தை எடுத்துள்ளார். இதில் பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராணி பத்மினி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை திரையிடக் கூடாது தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பத்மாவதி படத்தில் நடித்த தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு ராஜபுத்ர கர்னி சேனா அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றத்;தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்மாவதி படத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடுவண் அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், திரைப்படமாக எடுக்கும் போது வரலாற்று உண்மைகளை சிதைத்து விடக்கூடாது என்றார்.

இந்த நிலையில் ராஜ புத்ரர்களின் கோரிக்கைக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து நேற்று இது தொடர்பாக அவர் நடுவண் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

அதில், பத்மாவதி படத்தில் ராஜ புத்ரர்களைத் தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

எனவே ராஜ புத்ரர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே பத்மாவதி படத்துக்கு நடுவண் தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,611

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.