Show all

செயலலிதா இல்லச் சோதனை அ.தி.மு.க.வை அழிப்பதற்கான சதிமுயற்சி: தினகரன்

03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது,

செயலலிதா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் போது கணக்காய்வாளர் குருமூர்த்தி மடிக்கணினி, பென் டிரைவ் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது செயல்படாத கணினி, 5 பென் டிரைவ் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் பென் டிரைவில் ஆதாரங்கள் உள்ளதாக கூறுவது அ.தி.மு.க.வை அழிக்கக்கூடிய உச்சக்கட்ட சதி ஆகும். பென் டிரைவில் ரகசியம் இருக்கும் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

முதல்-அமைச்சர் எடப்பாடி, என்னை பார்த்து கட்சியில் எங்கு இருக்கிறார்? என்று கேட்கிறார். எங்களால் பதவிக்கு வந்த எடப்பாடி மற்றும் அவரோடு இருப்பவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளவும், எதிலும் மாட்டாமல் இருக்கவும் இதுபோல் கூறி வருகிறார்கள். முதல்வர் பதவிக்குரிய தகுதி இல்லாமல் பிதற்றுகிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு செயலலிதாவுக்கு சசிகலாவும், நானும் தான் மெய்காப்பாளர்கள். நான் செயலலிதாவை மகனாக இருந்து பாதுகாத்தேன்.

பெரா வழக்கு போன்ற வழக்குகள் நடந்த போது, செயலலிதா என்னை அரசியலுக்கு கொண்டு வந்தார். பெரிய குளம் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். செயலலிதா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டேன்.

பா.ஜனதாவில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்த மைத்ரேயன்கூட செயலலிதா வீட்டில் நடந்த சோதனைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி எதுவும் தெரிவிக்கவில்லை. செயலலிதா அரசு என கூறிக்கொள்ள இவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.

அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,611

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.