Show all

2,08,00,000 மாதச் சம்பளம் பெறும் தாத்தாவுக்கு பத்ம பூஷன் விருது!

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாசியன் தி ஹத்தி என்ற நிறுவனம் இந்திய மசாலாக்களுக்கு பெயர் போனது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமையல் அறைகளில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மசாலா நிறுவனத்தின் தலைவர் தரம்பால் குலாத்திக்குத் தான் குடியரசு நாள் அன்று மாலை பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 

தரம்பால் குலாத்தி நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் 15 விழுக்காடு வருவாய் அதிகரித்து 924 கோடி ரூபாய் சம்பாதித்திருக்கிறார்கள். அதே போல் நிகர வருமானமும் 24விழுக்காடு அதிகரித்து 213 கோடியாக வளர்ந்திருக்கிறது. இந்த வணிக வளர்ச்சியை கௌரவிக்கும் விதத்தில் தான், வணிகம் மற்றும் தொழில் துறையில் பத்ம பூசன் விருது வழங்கி இருக்கிறார்கள். 

இந்தியாவில் உள்ள அனைத்து வேக விற்பனைச் சரக்கு  நிறுவன தலைவர்களை விடவும் 95 அகவை தரம்பால்சிங்குக்குத் தான் அதிக சம்பளம் வழங்குகிறார்கள். 

ஐடிசி, கோத்ரேஜ் போன்ற மிகப் பெரிய நிறுவனத் தலைவர்களுக்குக் கூட இத்தனை சம்பளம் கிடையாதாம். இவர் கையில் வாங்கும் 25 கோடியில் சுமார் 22.5 கோடியை அப்படியே அறக்கொடையாக வழங்கி விடுவாராம்.   

தொடக்கத்தில் பாகிஸ்தானின் சியால்கோட்டில் தன் தந்தையோடு ஒரு சின்ன கடை நடத்தி வந்தார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது வெறும் 1500 ரூபாயுடன் தில்லியின் கரோல் பாக் பகுதியில் முதல் கடையைப் போட்டார். மசாலா அரைத்துக் கொடுக்கும் கடை. 

சாந்தினி சௌவுக்கில் தன் மசாலாவை சிப்பம் செய்து விற்க ஒரு சில்லறை வணிகக் கடை, இரண்;டு மூன்று ஆண்டுகளில் சொந்தமாக மசாலா அறைக்கும் ஆலை என ஏற்றம் தான். 

எம்டிஹெச் நிறுவனத்தின் 60 மசாலா பொருட்கள் விற்பனை ஆகின்றனவாம். மேலே சொன்ன ஒவ்வொரு மசாலா குறும்பைகளும்; மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி எண்ணிக்கையில் விற்கப்படுகிறதாம். 

இந்தியா தொடங்கி ஆப்கானிஸ்தான், ஈரான் வரை மூலப் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் உழவர்களிடம் இருந்து வாங்கி வருகிறார்களாம். அந்த அளவுக்குத் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதவராம் தாத்தா தரம்பால் குலாத்தி. 

இவரின் மகன் தான் அனைத்து வணிகத்தையும் கவனித்துக் கொள்கிறார். இவரின் ஆறு மகள்களும் இந்தியாவின் ஆறு பிராந்திய வணிகங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்தியா மட்டும் இன்றி துபாய், லண்டன் போன்ற இடங்களிலும் எம்டிஹெச்-க்கு அலுவலகங்கள் இருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இவர்களின் மசாலா ஏற்றுமதி ஆகிறதாம்.

நம்ம தமிழ்நாட்டின் சக்தி மசாலா நிறுவனம் கூட இந்த மாதிரி தரமும், அனுவமும், அறக்;கொடைகளும் பேணும் நிறுவனந்தான். அவர்களுக்கும் ஏதாவது விருது கொடுக்க தமிழக அரசியல் தலைகள் முயற்சி பண்ணலாமே!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,047.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.