Show all

ஒரு ஆணியும் பிடுங்கவில்லை! மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; ஊடகங்கள் எதிர்பார்ப்பு புஸ்ஸ்

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த நல்ல தீர்வு வரும்  என்றெல்லாம் ஊடகங்கள் தங்கள் அனுமானங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நடுவண் நீர்வளத்துறை அமைச்சகத்தின் பரிந்துரை குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடுவண் அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் வெளியாகின. உச்சஅறங்கூற்றுமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில் இது குறித்த நடுவண் அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒரு புறம் தமிழகம், புதுச்சேரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தயாராகி வருகின்றன. மற்றொரு புறம் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் நவநீதகிருட்டினன் தற்கொலை வரை தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடுவண்  அரசு இவ்வளவு நெருக்கடியிலும், 

காவிரி விவகாரம் தொடர்பான விவாதம் எதுவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னெடுக்கப் பெறவில்லையாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,740.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.