Show all

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பந்த சேதப்படுத்திய வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல தரப்பினரும் தெரிவித்துவந்தனர். ஏற்கனவே ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டுக்கு பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மித் அணிக்குத் திரும்பினாலும் ஓராண்டுக்கு கேப்டன் பதவிக்கு பரிசீலனை செய்யப்படமாட்டார். பான்கிராஃப்ட்டுக்கும் இதே தான் பொருந்தும். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதால் வார்னர் அணிக்கு திரும்பினாலும் எதிர்காலத்தில் கேப்டன் உள்ளிட்ட எந்தவித தலைமைப் பொறுப்புகளுக்கும் பரிசீலனை செய்யப்படமாட்டார். மேலும் இம்மூவரும் 100 மணி நேரம்  கிரிக்கெட் தொடர்பான பொதுநல சேவையில் ஈடுபட வேண்டும். அதே சமயம் கிளப் போட்டிகளில் விளையான தடையில்லை.

ஏற்கனவே, ஸ்டீவன் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் மற்றும் டேவிட் வார்னர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பொறுப்பில் இருந்தும் விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலிய எல்.ஜி நிறுவனம் டேவிட் வார்னருக்கு வழங்கிவந்த ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.