Show all

இன்று தமிழர்களுக்கு சோதனையின் உச்சமான நாள்! நகர்வோமா? மீள்வோமா?

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று இந்தியத் தமிழர்கள் வரலாற்றில் பதிவு செய்து வைத்துக் கொண்டு புரட்டிப் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். தமிழர்களுக்கு இது மட்டுந்தாம் சோதனையின் உச்சமான நாளா! இல்லை யில்லை. இது போன்று ஆயிரக்கணக்கான சோதனைகளைச் சந்தித்து தாம் அடுத்தடுத்த நகர்வுகளை செய்திருக்கிறோம். இது நேரலையாக சந்திக்கப் போகிற நடப்பு என்பதால் கொஞ்சம் கூடுதலாக கவலையைப் பதிவு செய்கிறோம். 

மோடி தமிழகத்திற்கு அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கெடுதிகள் எல்லாம் அறியாமையின் வெளிப்பாடு அல்ல. தெரிந்தே செய்து கொண்டிருக்கிற திட்டமிட்ட சதிகள். 

சோமலியாவை நினைவு படுத்தி நிறைய பதிவுகளை, நிறைய தமிழர்கள் வெளியிட்டு, இன்றைக்கு கார்ப்பரேட்டுகளோடு கைக்கோர்த்துக் கொண்டு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, நிகழ்த்திக் கொண்டிருக்கிற அதே மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ வேலைகளைத்தாம் சோமாலியா ஆளும் வர்க்கம் செய்து சோமாலியாவை உலக வரலாறு காணாத வறுமைக்கு தள்ளி விட்டது என்று எச்சரிக்கையுட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அங்கே அவர்கள் புரியாமல் இழைத்து விட்ட தவறை இங்கே புரிந்தே நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் மோடி என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது தாம் மிகப் பெரும் அவலம்.

அத்தி பூத்தாற்போல கிடைத்த ஓர் உச்சஅறங்கூற்று மன்றத் தீர்ப்பில் கூட மோடியின் அரசியல் தொடருவது இந்தியத் தமிழர்களுக்கு கிடைத்த சாபம் என்று விட்டு விட்டு அடுத்த நகர்வுகளை நோக்கி தமிழர்கள் நகரப் போகிறோமா! அல்லது காவிரி உரிமையைக் கைப்பற்றிட, மோடியின் அரசியலை வீழ்த்தி வெற்றி பெற்றிட, ஏதாவது உபாயம் காணப் போகிறோமா!  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.