Show all

நம்பிக்கையில்லா தீர்மானம்! சந்தர்பவாத அரசியல் செய்கிறதாம் தெலுங்கு தேசம்; ஜெயக்குமாரின் சந்தர்ப்பவாதம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவுக்கு சிறப்புத் தகுதி வழங்கும் விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பாஜக, தெலுங்கு தேசம் இடையே கசப்பான உறவு நீடித்து வந்தது. இவ்விவகாரம் தொடர்பாக நடுவண் அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசமும், ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜகவும் விலகின.

இதையடுத்து, பாஜக மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திர எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வந்தது. இதை தெலுங்கு தேசம் கட்சி ஆதரித்தது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆந்திர மக்களின் நலனை கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் ஜெயகுமார் கூறிய கருத்துக்களிலிருந்து எடப்பாடி- பன்னீர் அதிமுக- பாஜகவிற்கு ஆதரவு நிலை எடுக்கும் போலத் தெரிகிறது. ‘நடுவண் அரசுக்கு எதிராக குரலெழுப்பாமல் தெலுங்கு தேசம் கட்சி ஏன் இத்தனை நாட்களாக மௌனம் சாதித்து. இது முழுக்க முழுக்க சந்தர்பவாத அரசியல்’ என்று கூறி தமிழகத்திற்கு பாஜக செய்து வரும் துரோகங்களை ஊத்தி மூடி வைத்து விட்டு சந்தர்ப்ப வாத அரசியலை முன்னெடுக்கும் போலிருக்கிறது எடப்பாடி- பன்னீர் அதிமுக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,728.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.