Show all

புனேவில் எதிர் திசையில் வாகனம் ஓட்டினால் கதைகந்தல்தான்! டயரைப் பஞ்சராக்கும் புதிய முயற்சி

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிராவில் நேரிடும் சாலை விபத்துகளில் புனே நகரம் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் போக்குவரத்து விதிமீறலே விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக உள்ளது. இதுதொடர்பாக ஆண்டு முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்துப் பரப்புதலை மேற்கொண்டும் பயனில்லை. எனவே விதிமீறலை தடுக்க புனே நகர போக்குவரத்து காவல்துறையினர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அந்த நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அமனோரா பூங்கா நகர் சாலையில் புதிதாக இரும்பிலான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையை நேர் வழியில் தாண்டிச் சென்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எதிர் திசையில் வந்தால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை பஞ்சராக்கும் வகையில் வேகத்தடையில் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வேகத்தடை தொடர்பாக சாலையின் இருபுறமும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. புனே நகரம் முழுவதும் இதுபோன்ற வேகத்தடைகளை அமைக்க போக்குவரத்து காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.