Show all

அது ஒருவகை ஆதிக்கத்தின் வெளிப்பாடே! சசிகலா என்றாலே, ஊடகம், இதழியலாளர்களுக்கு எளக்காரந்தான்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலா- செயலலிதாவிற்குத் தோழியாக இருந்து, தன் கணவரின் ஆலோசனையோடு செயலலிதா, ஆட்சியில் அமர ஒத்துழைப்பாய் இருந்தவர் என்பதுதான் உண்மை. 

செயலலிதா முதல்வராக நடராசன் தான் முதன்மைக் காரணம், அரசியலை விட்டே ஒதுங்குவதாக ஜெயலலிதா சொன்ன போது ஊக்கம் கொடுத்தவர் நடராசன் தான் என்று முன்னாள் இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி சந்திரலேகா தெரிவித்திருந்தார். 

நடராசன் அதிமுகவாக இயங்கியதே யில்லை. அதிமுகவின் ஆலோசகராகவே இயங்கியிருக்கிறார். புதிய பார்வை இதழ் ஆசிரியர் நடராசன் அவர்களுக்கு தனித்த அடையாளமும் புதிய பார்வையும் உண்டு.

சசிகலாவை நடராசனின் அடையாளமாகக் காட்டினால், சசிகலாவை செயலலிதாவின் தோழியாக அங்கிகரிக்கலாம். சசிகலாவை செயலலிதாவின் வீட்டு வேலைக் காரியாக காட்டினால், சசிகலாவை அசிங்கப் படுத்தலாம்ளூ செயலலிதாவை அசிங்கப் படுத்தலாம்ளூ நடராசனை அசிங்கப் படுத்தலாம். என்பது தான் திமுக- ஊடகங்களுக்கும், இதழியலாளர்களுக்கும் கற்றுக் கொடுத்த நிலைபாடு. 

கலைஞருக்கு எப்போதுமே தமிழ் அடையாள அமைப்புகள் மீது ஒரு வெறுப்பு உண்டு. பாவம் பெருஞ்சித்திரனார்! அவர் வெளியில் இருந்த காலத்தை விட சிறையில் இருந்த காலம் தான் அதிகம். அவர் சங்க காலச் சான்றோர்களை நினைவு படுத்தும் அருமையான அழகுதமிழ் அறிஞர். அவர் பக்கத்தில் நாம் நின்ற நினைவுகளை மீட்டினால், உடல் முழுக்க ஆயிரம் ஓல்ட் மின்சாரம் பாய்ந்தது போன்ற அப்படியொரு எழுச்சி தோன்றும். பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்தது போன்ற மகிழ்ச்சி தோன்றும்.  அந்த வழியான அடையாளம் உடையவர்தான் நடராசன். சசிகலாவை செயலலிதா வீட்டு வேலைக்காரியாக அசிங்கப் படுத்தத் தொடங்கியது திமுகதான். இன்றைக்கு எல்லா ஊடகங்களும், இதழியலாளர்களும் அந்த வேலையை வஞ்சனையில்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர். சசிகலா பற்றி ஒரு செய்தி கிடைத்தால் போதும். உடனே கண், காது மூக்கு வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையான ஒரு நடப்பு நேரலைச் செய்திதான் பதினைந்து நாள் சிறை விடுப்பில் வந்த சசிகலா பத்து நாளில் சிறைக்குத் திரும்புவது. ஆனால் சசிகலாவிற்கு பத்து நாள் சிறை விடுப்புதான் கிடைத்தது என்பதும், வருவதும், போவதுமான பயண நாட்களுக்கு கணக்கு இல்லை என்பதுவும் தாம் உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.