Show all

தமிழகஅரசு- அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை! காவிரி விவகார மோசடி மோடி அரசு மீது

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மோடி அரசு மீது தமிழக அரசு சார்பில் இன்று அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு பதிகை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டை சுமுகமாக மேற்கொள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை 6 கிழமைகளுக்குள் அமைக்க உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் இல்லாவிட்டாலும் நீர் பங்கீட்டுக்கான கண்காணிப்பு குழு உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதுவும் நிறைவேற்றப் படவில்லை. இந்நிலையில் உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை நடுவண் அரசு அலட்சியம் செய்து விட்ட மோசடிக்;; கெதிராக தமிழகமே குமுறிக் கொண்டிருக்கிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், நடுவண் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் நடுவண் அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், இன்று காலை 10 மணிக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு பதிகை செய்யப்படவிருப்பதாகத் தெரிகிறது. மோடி அரசின் காலதாமதத்தால் தமிழகத்தில் கழிமுக உழவர்கள்; பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,743.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.