Show all

மக்களுக்கு பக்கோடா கடைவைக்க ஆலோசனை மட்டும் கூறி வரும், மோடியின் தாராள நிதி இராணுவத்திற்கு

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் பட்டியலில், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடிஸ் ‘மிலிடரி பேலன்ஸ் 2018’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டில், இந்திய அரசு ராணுவத்துக்கு சுமார் ரூ.3.36 லட்சம் கோடி ஒதுக்கியது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட ரூ.3.27 லட்சம் கோடி அதிகம். இதன்மூலம், உலக அளவில் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5ம் இடத்தைப் பிடித்துள்ளது.

பிரிட்டன் அரசு ராணுவத்துக்கு கடந்த ஆண்டில், ரூ.3.36 லட்சம் கோடி ஒதுக்கியது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா ரூ.38.57 லட்சம் கோடி முதலிடத்திலும்

சீனா 2-ம் இடத்திலும் ரூ.9.63 லட்சம் கோடி,

சவுதி அரேபியா 3-ம் இடத்திலும் ரூ.4.9 லட்சம் கோடி,

ரஷ்யா 4-ம் இடத்திலும் ரூ.3.91 லட்சம் கோடி உள்ளன.

இராணுவத்திற்கு மட்டும் தாராள நிதி ஒதுக்கி பகை வளர்ப்பில் ஈடுபடும் மோடியின், மக்கள் வளர்ச்சியில் ஈடுபாடில்லா நிலை மக்களை அதிர்ப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.