Show all

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்! உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவு

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்று நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை என்று தலைமை அறங்கூற்றுவர் குறிப்பிட்டுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா இடையில் நடக்கும் காவிரி ஆற்றுநீர் பங்கீட்டுப் பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கி வருகிறது.

தலைமை அறங்கூற்றுவர்கள் தீபக் மிஸ்ரா, அமித்வராய், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வாசித்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,700

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.