Show all

பல்வேறு துறைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு பாரம்பரியத்தை கையளித்திருக்கிறார் நம்ம மோடி

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நம்ம மோடியின் நண்பர் பாபா இராம் தேவ் அழகு மற்றும் மருத்துவப் பொருள்களின் பாரம்பரிய தயாரிப்பு முறைகளை கார்ப்பரேட்டாக்கி உலகப் பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.

மண் பாண்டத்தில் அசத்தல் குக்கர் நவீன வடிவமெடுக்கிறது பாரம்பரியம் என்று நிறைய வடஇந்திய கார்ப்பரேட் கம்பெனிகள் நேரடிச் சந்தையிலும் இயங்கலை சந்;தையிலும் களமிறங்கி விட்டார்கள். 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் திருநாளை  முன்னிட்டு மண் பானைகள் வலம் வரும். அடுத்து, கோடை காலத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து சில்லிப்புடன் குடிக்க மண்பானையை மக்கள் தேடுவது வழக்கம். கார்த்திகை மாதம் விளக்குத் திருவிழா கொண்டாட மண் விளக்குகைளத் தேடுவோம். இதுவெல்லாம் நகர்ப்புறத்தில். 

ஆனால், கிராமப்புறங்களில் இன்றும் திருவிழா  காலங்களில் தீச்சட்டி, கிராமப்புற பயன்பாட்டிற்கு தயிர்பானை, சமையல் பானை,  காய்கறி, குழம்பு வைக்க மண் சட்டிகள், பனியார கல், மற்றும் சேமிக்க  உண்டியல், திருஷ்டி கழிக்க திருஷ்டி பொம்மை என்று  மண்பாண்டங்கள்  பாரம்பரியமாக விற்பனையாகி வருகின்றன. 

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கைவினைக் கலைஞர்களுக்கு எல்லாம் ஆப்பு வைக்க வடஇந்திய கார்ப்பரேட்டுகள் களமிறக்கப் பட்டுள்ளனர். தமிழர் பாரம்பரிய திருவிழாவான கார்த்திகை விளக்குத் திருவிழாவின் விளக்குகளில் ஹிந்தியில் ஓம் என அச்சிட்டு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். 

முன்பு தாங்களே மண் கைவினைப் பொருட்களை தயாரித்து முழுப்பயனும் அடைந்து வந்த கைவினைக் கலைஞர்கள் இப்பொழுது கார்ப்பரேட் கம்பெனிகளின் கைவினைப் பொருட்களை அதிக முதலீடு செய்து குறைந்த கூலிக்கு விற்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.  

துளசி மாடம், காதல்பறவைகள் குடில், காற்றில்  அசைந்தாடி ஓசை எழுப்பும் மணிகள் என பலவகையான மண்பாண்டங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. உலோகம் மற்றும் நெகிழி வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வரும்  அனைத்து பாத்திரங்களும் இன்று மண் பாண்டங்களிலும் உருவமெடுத்து வருகிறது. வெள்ளை வண்ணம் பூசிய தண்ணீர் பானை, குழாய் பொருத்திய தண்ணீர்  பானை, குடுவை, பலசரக்கு போட்டு வைக்கும் அஞ்சறைப்பெட்டி என்று  பலவிதமாக சந்தைக்கு வரத்துவங்கியுள்ளன.

இந்நிலையில், மண் பாண்டத்தில் உருவாக்கப்பட்ட குக்கர், உலோக குக்கரை போலவே  இருபுறமும் உலோக கைப்பிடி, மேல் மூடியின் நடுப்பகுதியில் இருந்து  குக்கரின் கீழ் பகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்ட சில்வர் வளையம், மூடியை  கீழ் பகுதியோடு இறுக்க, மேல் மூடியின் நடுவில் திருகாணி சமையலின் போது உள்ளே  வைக்கப்பட்ட உணவுப்பொருள் வெந்து விட்டதை அறிவிக்க, பால் குக்கரில் உள்ளது  போல் விசில் என கனகச்சிதமாக, பாதுகாப்பு அம்சமாக மண்பாண்ட குக்கர்  உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் அளவு மண்  பாண்ட குக்கர் ரூ2,500க்கு விற்கப்படுகிறது. இவற்றை பலர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உருவெடுக்கும் எந்தவொரு  தொழிலும் அழியாது என்பதற்கு அடையாளமாக தற்போதைய மண் பாண்ட தொழிலும்  மாறியுள்ளது.

தொழில் அழியவில்லை- தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் அழிகிறார்களே!

பெரும்பாலான கிராமங்களில் குடிசை தொழிலாக இருந்து வந்த மண்பாண்ட தொழில் கடந்த  சில ஆண்டுகளாக நலிவடைந்து விட்டது. மண் பானை உற்பத்திக்கு தேவையான மண்  இலவசமாக எங்கும் எடுக்க முடிவதில்லை. சில இடங்களில், இதற்கு தேவையான  மண் இருந்தாலும், அதற்கு விலை அதிகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் மண்  பாண்ட தொழிலை பாரம்பரியமாக செய்து வந்தவர்கள் விட்டுவிட்டனர்.

ஆனால்,  பெரிய அளவில் வடஇந்திய கார்ப்பரேட் கம்பெனிகளில் நவீன முறையில் மண் பாண்ட நவீன பாத்திரங்கள்  உற்பத்தி செய்யப்பட்டு, அங்கிருந்து நாடு முழுவதும் விற்பனைக்கு  வருகிறது. இதன் விலை குக்கர் விலையைவிட அதிகமாக இருப்பதாக நுகர்வோர்  கருதுகின்றனர். ஆனால், இதில் சமைப்பதால் கிடைக்கும் சுவை அதிகம் என்று பலரும் வாங்கிச்செல்கின்றனர

எல்லாம் சரி இந்தத் தொழிலை கார்ப்பரேட்டுகளுக்கு கையளிக்காமல் பாரம்பரியமாக செய்து கொண்டிருந்தவர்களுக்கே நவீன தொழில் நுட்ப அறிவும், கடனும் வழங்கி முன்னெடுப்பது தானே நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும். 

அதெப்படிச் செய்வார் இந்த மோடி. ஏழை பாழைகளை மேலும் பிச்சைக்காரர்கள் ஆக்கி அடிமைப் படுத்துவதுதானே மோடியின் தத்துவம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,744.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.