Show all

மக்களோடு கலக்கிறார் கமல்ஹாசன்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இன்று

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கமல்ஹாசன், பின்னர் விமான நிலையத்தில் இருந்து சொகுசுந்து மூலம் போராட்டம் நடைபெற்று வரும் குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு, போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டு அறிகிறார். மாலை வரையிலும் மக்களோடு, மக்களாக போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இன்று மாலையே அவர் மீண்டும் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,744.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.