Show all

மோடி அரசின் நோக்கம் நல்லாட்சி செய்வது அல்ல! அதிகாரத்தை, ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் மயமாக்கலே

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கொண்டு வர உள்ள நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி கடுமையாகப் பேசியுள்ளார்.

      மேற்கு வங்காள மாநிலம், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருட்டிணா நகரில் இன்று நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

      நடுவண் அரசு நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு எனும் மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், மக்கள் வங்கியில் செலுத்திய பணத்துக்கு பாதுகாப்பு இருக்காது.

      மக்களின் பணத்தை நடுவண் அரசு கொள்ளையடிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.   மாநிலத்தில் அடுத்து நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் சாதி, மத மோதல்களை தூண்டிவிடுவார்கள். மக்கள் மடிந்தாலும், வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டாலும், அவர்கள் கவலைப்படமாட்டார்கள். பாஜக சொல்வதைக் கேட்காதீர்கள்.

      நாம் அனைத்து மதங்களுக்கும் சமமான முதன்மைத்துவம், அளித்து மதிக்கிறோம். ஆதலால், பாஜகவிடம் இருந்து ஹிந்துத்துவத்தை கற்றுக்கொள்ள தேவையில்லை.

      மேற்கு வங்கத்தில் நாங்கள் எப்படி அரசு நடத்துகிறோம் என்பதை பார்த்து நடுவண் அரசு எங்களிடம் இருந்து கற்க வேண்டும். 1300 கி.மீ தொலைவுக்கு கிராமத்தில் சாலைகள் அமைத்துள்ளோம். 25 லட்சம் வீடுகளை ஏழைகளுக்கு கட்டிக்கொடுத்துளோம்.

      இலவச சுகாதாரத் திட்டத்தையும், ரூ.20க்கு அரசியை கொள்முதல் செய்து கிலோ 2ரூபாய்க்கு மக்களுக்கு கொடுக்கிறோம். பிற்படுத்தப் படடோர், மலைச்சாதியினருக்கு 57 லட்சம் சான்றிதழ்களை வழங்கி இருக்கிறோம். அகதிகளுக்கும் 13 ஆயிரம் நிலப்பட்டாக்கள் வழங்கி இருக்கிறோம். இதுபோன்ற அரசை நாட்டில் எங்கும் பார்த்து இருக்க முடியாது.

      ஆண்டுக்கு 6 லட்சம் பெண் குழந்தைகள் பயன் பெறும் வகையில் ரூபா ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் ஒவ்வொருவரும் ரூ. 25 ஆயிரம் பெறலாம்.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

      மோடிக்கு யாரும் ஆட்சி நடத்துவது எப்படி என்று சொல்லித் தரத் தேவையில்லை என்பதுதான் உண்மை.      தமிழகத்தில் நடக்கும் எடப்பாடி-பன்னீர் அரசுக்கு இருக்கிற, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அக்கரை கூட மோடி அரசுக்குக் கிடையாது; அது அவர்களுடைய நோக்கமும் இல்லை. அவர்களுடைய நோக்கம் எல்லாம், ஒட்டு மொத்த இநதியாவையும், ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரவேண்;டும் என்பது மட்டுந்தாம்;. அதை அவர்கள் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

      அவர்களுக்கு கற்றுத் தந்து ஒன்;றையும் சாதிக்க முடியாது. மடைமாற்ற வேண்டியது மக்களைத்தாம்;. 

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.