Show all

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், தமிழர் பகுதியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தக்க வைத்துள்ளது

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றதைப் போல், சிங்களர் பகுதியில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது.

இலங்கை அளவில் 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றதையடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

இலங்கை அரசியலில் ராஜபக்சேவின் கை ஓங்குவதால் பிரதமர் ரணில், அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திர கட்சியைக் கைப்பற்றுவதற்கும் மகிந்த வியூகம் வகுத்து வருகிறார்.

இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்; இலங்கையின் வரலாற்றில் ஆளும் கட்சிகளை எதிர்க்கட்சியானது உள்ளாட்சி தேர்தலில் தோற்கடித்த முதல் வரலாறு நிகழ்ந்திருக்கிறது என கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.