Show all

ஐபேசி கேட்பு அளித்தவருக்கு பயன்படுத்தப்பட்ட சோனி பேசியை அனுப்பி வைத்த அமேசான்! காவல்துறையில் புகார்

அமேசான் மூலம் ஐபேசி கேட்பு அளித்தவருக்கு, பயன்படுத்தப்பட்ட சோனி பேசியைக் கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது அமேசான்.

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உத்தர பிரதேசத்தைச்  சேர்ந்த வாலிபர் ஒருவர் அமேசானில் முன்பணமாக ரூபாய் 58,410 செலுத்தி ஐபோன் எக்ஸ் ஆர் மாதிரி ஆப்பிள் பேசிக்கு கேட்பு அளித்துள்ளார். அவர் கேட்பு அளித்த அடுத்த நாள் அமேசான் வழங்கிய பெட்டியைப் பிரித்தபோது உள்ளே சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா மாதிரி பேசி இருந்துள்ளது. மேலும் அந்த பேசி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய பேசியாக இருந்துள்ளது.

இதுகுறித்து அவர் உடனடியாக அமேசான் வாடிக்கையாளர் மையத்தை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். அவர்களும் ஒரு கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருகிழமையாகியும் அவர்கள் தகுந்த பதில் அளிக்கவில்லை. இதனால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்தியாவுக்கான அமேசான் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தினர்.

காவல்துதறையினர் தலையிட்டதும் உடனடியாக இந்த பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.