Show all

6வது முறை தங்கம் வென்று மேரி கோம் சாதனை! உலக பெண்கள் குத்துச்சண்டையில். விளையாட்டு விசிறிகள், மின்மினிகள் வாழ்த்து

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது.  இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை வென்றார். குத்துச்சண்டை அரங்கில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும் மேரிகோமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இவருக்கான வாழ்த்தை தமிழகத்திலிருந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் விளையாட்டு மின்மினிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.