Show all

மோடிக்கு மம்தா எச்சரிக்கை! ஹிந்தி திணித்திட, தமிழகத்துடன் மோதி, மூக்குடைத்துக் கொள்ள வேண்டாம்

மோடி அரசை விமர்சிக்கும் தருவாயில், ஹிந்தித் திணிப்பிற்கு எதிரான தமிழக மரபை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொண்டாடியுள்ளார்

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குறிப்பாக தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முகமாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், வரைவு அறிக்கை ஒன்றைப் பதிவு செய்து மும்மொழிக் கொள்கை திட்டத்தை முன்மொழிந்தது மோடி அரசு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், உடனடியாக மோடி அரசு பின் வாங்கியது. 

புதிய கல்விக் கொள்கை பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டுள்ளதால், இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயம் என்ற அம்சம் நீக்கப்பட்டது. 


இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, இந்தியா மொழிவாரி மாநிலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழியும், தனித் தனியாக பாரம்பரியங்களும் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்திய நாடு. 
எனவே தமிழகத்தில் போய் ஹிந்தி படிக்க வேண்டும் என்று பாஜக அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழர்கள் ஹிந்தி கற்க மாட்டார்கள் என்று தெளிவாக அடித்துப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. மாநிலங்களின் தலைவிதியை நிர்ணயிக்க பாஜகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் சாடியுள்ளார். 

ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அளவிற்கு உலகஅளவில் வங்காள மொழி பேசுகிறவர்களும் உள்ளனர். வங்காளம் தமிழகத்துடன் மொழிப் பிரச்சனையில் கைகோர்க்குமானால் மோடி அரசுக்கு கூடுதல் தலைவலிதான். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,181.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.