Show all

மம்தா பானர்ஜி முழக்கப் போரட்டத்தை முடித்துக் கொண்டார்! உச்சஅறங்கூற்று மன்ற நடுநிலை உத்தரவால்

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தி, ஆட்சியைக் கலைத்து விடும் கனவு நோக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையரை கைது செய்ய, எந்த முகந்திரமும் இல்லாமல், இரவு நேரத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு துறை முடுக்கி விடப் பட்டுளளது மோடி அரசால் என குற்றம் சாட்டி மேற்கு வங்காள முதல்வர் கடந்த மூன்று நாட்களாக முழக்கப் போராட்டம் நடத்தி வந்தார்.

நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் முழக்கப் போராட்டத்தை கைவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. மாறாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர்.

மாநில அரசின் அனுமதி இல்லாமல் காவல்துறை ஆணையரைக் கைது செய்ய நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என நடுவண் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மம்தா கூறுகையில் இது தார்மீக வெற்றி. உச்சஅறங்கூற்றுமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் சாதகமான தீர்ப்பால் முழக்கப் போராட்டத்தை கைவிடுவதா வேண்டாமா என்பது குறித்து இன்று தன்னை சந்திக்க வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினார் மம்தா. அதில், போராட்டத்தை கைவிட முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து மாலை 6.15 மணியளவில், தான் போராட்டத்தை கைவிடுவதாக மம்தா அறிவித்தார். 

உச்சஅறங்கூற்றுமன்றம் எங்களுக்கு சாதகமான உத்தரவை தந்துள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறேன் என்று மம்தா அப்போது அறிவித்தார். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் நிலவிய பதற்ற சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.