Show all

தங்கள் சாதனையை பாஜக மீது ஏற்றிப் பாராட்டும்; பாமக! நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையும், 

மேட்டூரில் இருந்து சேலத்திற்கு பயணிகள் தொடர்வண்டி இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை சென்னை வரை நீட்டித்து மேட்டூரை சென்னையுடன் இணைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையும் பாமக பல ஆண்டுகளாக கொண்டிருந்தது.

தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக வேட்பாளர் ரங்கசாமி வேலு தொடர்வண்டித் துறை அமைச்சராக மோடி ஆட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அமைச்சராகப் பணியாற்றிய போது, 

மேட்டூர்அணையிலிருந்து சேலம் வரை சில பெட்டிகள் இணைக்கப் பட்டு சென்னைக்கு எழும்பூர் விரைவு வண்டியுடன் இணைத்து சென்னைக்கு மேட்டூரிலிருந்து பயண வசதி ஏற்படுத்தப் பட்டது. அதுவும் சில மாதங்களுக்கு முன்னர் பாஜக ஆட்சியில் சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்தப் பட்டு விட்டது.

மேலும், தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள தொடர்வண்டி பாதை அமைக்கப்படவும் திட்டம் ஏற்கப் பட்டது. ஆனால், அதன்பின் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால் பணிகள் தொய்வடைந்தன.

இந்த நிலையில் தற்போது பாஜக அரசு மீண்டும் அன்று போலவே திரும்ப தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடுவதுதான் பாமக, பாஜக, அதிமுக கூட்டணி முயற்சிக்கு அச்சாரமாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப் பாதை அமைக்க நடுவண் இருப்புப் பாதைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருப்பதன் மூலம் தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது. என்று மகிழ்ச்சியை பதிவு செய்திருக்கிறார்.

தருமபுரி- மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை அமைக்கும் விசயத்தில் தருமபுரி மாவட்ட மக்களுடன் நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.