Show all

கைலி ஆடை எனக்கு பிடிக்கும், பொய் சொல்ல முடியாது! இணையத்தில் தீயாகிறது நடிகை அமலாபால் பதிவு

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையலகில் முன்னணி நடிகையான அமலா பால் கைலி உடுத்திய படம் இணையத்தில் தீயாகி வருகிறது. 'திருட்டுபயலே 2' மற்றும் 'ராட்சசன்' போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். 

இந்நிலையில் அவர் தன்னை கைலி ஆடையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில், 'கைலி ஆடை எனக்கு பிடிக்கும். பொய் சொல்ல முடியாது' என்றும் பதிவிட்டுள்ளார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,054.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.