Show all

மோடி அரசால் கேரளாவிற்கும் பிரச்சனையா! மோடிஅரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நிரந்தர தொழிலாளர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.  மோடி அரசை கண்டித்து நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து வர்த்தக யூனியன்களும்  பங்கேற்றுள்ளன. 

16 வர்த்தக யூனியன்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிகிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கண்காட்சி காவல் நிலையத்தில் இருந்து  ஆளுநர் மாளிகை வரை  ஊர்வலமாக செல்ல தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.  பிற மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று வர்த்தக யூனியன்கள் தெரிவித்து உள்ளன. வங்கிகள் மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நடுவண் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் அரசுப்பேருந்துகளும் இன்று கேரளாவில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கேரளாவில் முழு அடைப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

தொழிலாளர் நலப் பேராட்டங்களை மிகச் சிறப்பாக கேரளா முன்னெடுக்கும் என்பது உலகறிந்த செய்தி. ஆனாலும் செவிமடுக்குமா மோடிஅரசு அல்லது,

தமிழர்களுக்கு அடித்துக் கொண்டிருக்கிற ஆப்புகளில் ஒன்றை அங்கேயும் அடிக்குமா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.