Show all

தமிழர் இயலாமையின் வெளிப்பாடாய், தீக்குளித்த நியுட்ரினோ எதிர்ப்புப் போராளி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழகம் உடைமைகள், உரிமைகளைப் படிப்படியாக இழந்து ஒரு இயலாமைச் சமூகமாக மாறி வருகிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகளை முறையிடுவதற்கும், தீர்வுகளுக்குமான நல்ல தலைமை இல்லாமல், ஒரு இயலாமைச் சமூகமாக மாறி வருகிறது தமிழ்ச் சமூகம். கச்சத் தீவு பிரச்சனையிலிருந்து, தமிழிழ மக்களை கொத்து கொத்தாக கொன்றொழிப்பதற்கு 12 உலக நாடுகளோடு இந்தியாவும் ஆயுதம் வழங்கிய அவலம், கல்வி உரிமையை மறுத்து நீட் தேர்வு, வாழ்வாதார உரிமையை மறுத்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, எனத் திட்டங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வஞ்சகம், நாம் தேர்ந்தெடுத்த அரசின் கழுத்தில் கத்தி வைத்துக் கொண்டு மிரட்டுதல், அகழாய்வு மறுத்தல் என்று ஒவ்வொரு அடிப்படை உரிமையாக பறிக்கப் படும் போது அதிலிருந்து மீட்பதற்கும் போராட்டங்களும், உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்புகளும் கூட விழலுக்கிறைத்த நீராகிப் போகிறபோது தமிழர்கள் தங்களின் கடைசி ஆயுதமான தற்கொலையை முன்னெடுத்து வருவது தமிழ்ச் சமூகத்தைச் சூழ்ந்திருக்கும் பேராபத்து ஆகும்.

கடந்த சனிக்கிழமையன்று, மதுரையில், வைகோவால் நடத்தப் பட்ட நியூட்ரினோ எதிர்ப்புக் கூட்டத்தில் மதிமுக நிர்வாகி ரவி தீக்குளித்தார். படுகாயமடைந்த ரவி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். தீக்குளித்த மதிமுக நிர்வாகி ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.