Show all

தீர்ப்பா! நிர்பந்தமா! காலையில் தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் மாலையில் பதவி விலகல்

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐதராபாத்தில், சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் தொழுகையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதில் 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின் போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் சுட்டதில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்து தேசிய குற்ற புலனாய்வு முகமை அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்பு தீர்பளித்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களான அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் முதன்மைக் குற்றவாளிகளாக குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தனர். கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தற்போது தீர்பளிக்கப்பட்டுள்ளது 

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை தீர்ப்பு வழங்கிய அறங்கூற்றுவர், ரவீந்திர ரெட்டி, மாலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,759.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.