Show all

'எப்1' இந்த ஆடம்பரஎண்ணின் விலை 132கோடி!

04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உங்களுக்கு பிடித்தமான சொகுசுந்து எண்ணுக்கு சில ஆயிரம் செலவு செய்து வாங்கிய பெருமையில் மிதப்பவரா நீங்கள்!

சில ஆயிரம் அல்ல, சில இலட்சம் அல்ல, பல கோடி கொடுத்து தன் சொகுசுந்திற்கு ஆடம்பர எண் வாங்கியிருக்கிறார் இங்கிலாந்தில் ஒருவர். போக்குவரத்து அலுவலகங்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி விருப்பமான, அதிர்ஷ்டமான எண்களை தங்கள் வாகனத்துக்கு வாங்குவது சிலருக்கு வழக்கம்.

எண்ணியல் நம்பிக்கை வைத்திருப்போர், தங்களது வாகனத்திற்கு ஆகூழ் எண்ணை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவர்.

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள ஆடம்பர எண்ணுக்கு அளிக்கப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ.132 கோடியாகும். இந்த காசுக்கு நம்ம ஊரில் 4000 மாருதி சுஸுகி ஆல்டோவை வாங்கலாம். அல்லது 10 புகாட்டி வெய்ரோன் காரை வாங்க முடியும்.

எஃப் 1  என்றிருப்பதுதான் அந்த ஆடம்பர எண்ணின்; சிறப்பம்சம். இதன் தற்போதைய உரிமையாளர் அப்சல் கான். இவர் கான் டிசைன் எனும் உலகப் புகழ் வாய்ந்த வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மிகவும் உயர் மதிப்பிலான சொகுசுந்துகளை வாடிக்கையாளர் விருப்பத்துக்கேற்ப மாற்றித் தரும் பணியை செய்கிறது. ஃபார்முலா -1 எனும் சர்வதேச புகழ்பெற்ற மோட்டார் பந்தயத்தை குறிப்பதோடு மட்டுமல்லாமல், இரு இலக்க எண்ணாக உள்ளது இந்த ஆடம்பர எண். இவர் தற்போது தனது புகாட்டி வெய்ரோனில் இந்த ஆடம்பர எண்ணைப் பயன்படுத்துகிறார்.

இந்த ஆடம்பர எண்ணை பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடிக்கு கான் வாங்கினார். இதன் முந்தைய உரிமையாளர் எஸெக்ஸ் சிட்டி கவுன்சிலாகும். இந்த கவுன்சில் 104 ஆண்டுகள் வைத்திருந்து ரூ.4 கோடிக்கு இந்நிறுவனம் கானிடம் விற்றது. 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 3,200 விழுக்காடு அதிக விலைக்கு விற்றுள்ளார் கான்.

இங்கிலாந்தைப் பொறுத்தமட்டில் சொகுசுந்தின் ஆடம்பர எண் என்பது தனி நபருக்காக உருவாக்கப்பட்டு அளிக்கப்படுவதாகும். அந்த எண் ஒருபோதும் மற்றவருக்கு வராது. அந்த வகையில் கானுக்கு பல கோடிகளை லாபமாக கொட்டியுள்ளது எப் 1 ஆடம்பரஎண்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,760.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.