Show all

நிறைவடைந்தது காமன்வெல்த் போட்டி: 26 தங்கம் உட்பட 66 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் இந்தியா

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இந்திய வீரர்களில் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. 

கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியின் நிறைவு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்திரேலிய கலைஞர்களின் இசைநிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சி, வாணவேடிக்கையுடன் காரரா விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் நிறைவு விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தேசியக் கொடியேந்தி அணியை வழிநடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.