Show all

தமிழில் 'மக்கள்அமைப்பு' 'மக்கள்ஆணையம்' என்று வழங்கப்பட வேண்டும்! லோக்பால், லோக் ஆயுக்தா என்பன சமசுகிருதச் சொற்கள்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்கள்அமைப்பு' தேசிய அளவிலானது. மக்கள்ஆணையம் மாநில அளவிலானது. மக்கள்அமைப்பு- இந்தியத் தலைமை அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தேசிய அளவில் விசாரிப்பதற்கானது என்றும்,

மக்கள்ஆணையம்- மாநில முதல்வர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாநில அளவில் விசாரிப்பதற்கானது என்றும், முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. 

இவைகளை தொடங்க வேண்டிய பொறுப்பு நடுவண், மாநில அரசுகளை சார்ந்தே இருக்கிற நிலையில் மக்கள்அமைப்பும், மக்கள்ஆணையமும் ஏனோதானோவென்றே முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அப்படி இப்படியென்று ஒருவழியாக 'மக்கள்அமைப்பின்' தலைவராக அறங்கூற்றுவர் பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  'மக்கள்அமைப்பு' உருவாக்கப்பட்டது. இதில் நியமனம் செய்ய வேண்டிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவை இந்தியத் தலைமை அமைச்சர் தலைமையிலான குழு முடிவு செய்யும்.

இந்தக்குழுவில் உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர், நாடாளுமன்றப் பேரவைத்தலைவரும் அடங்குவர். 

தலைவர் நியமிக்கப் பட்டேயாக வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் 'மக்கள்அமைப்பு' தலைவராக பினாகி சந்திரகோஷ் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் 'மக்கள்அமைப்பின்' தலைவராக ஓய்வுபெற்ற உச்சஅறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் பினாகி சந்திரா கோஷ் உள்பட 9 பேரை குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

மேலும் 'மக்கள்அமைப்பு' உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம், இந்திரஜித் பிரசாத் கவுதம், மற்றும் அஜய்குமார் திரிபாதி, தினேஷ்குமார் ஜெயின், பிரதீப் குமார் மொகந்தி ,திலீப் போஸ்லே, மகேந்தர்சிங், அபிலஷாகுமாரி, ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு நிலையில் பரபரப்பாக இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் மீது முன் வைக்கப்பட்டு வரும் ரபேல் குற்றச்சாட்டு 'மக்கள்அமைப்பில்' விசாரிக்கப்படுமா என்;று மக்கள் நடுவே ஆர்வம் தலைதூக்கியுள்ளது. அப்படியான விசாரணை முன்னெடுக்கப்படுமேயானால், 'மக்கள்அமைப்பின்' மீதான நம்பகம் உறுதிப்படும்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.