Show all

அசோக் கெலாட் இந்திய மக்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தி! மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சீனா, ரஷ்யா போல இந்தியா மாறும்

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த தேசம் இனிமேல் தேர்தலையே சந்திக்காது, சீனா, ரஷியா வழியை நோக்கிச் செல்லும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்திய மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த தேசமும், ஜனநாயகமும் மோடியின் ஆட்சியில் ஆபத்தில் இருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார். தான் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் எனும் இலக்கை அடைவதற்காக, அண்டை நாட்டுடன் போர் செய்வது சரியல்ல என்று தெரிந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் போருக்குக் கூட மோடி செல்வார்.

வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் மீண்டும் மோடியை தேர்வு செய்து இந்தியத் தலைமை அமைச்சராக அமர்த்தினால், இனிமேல் தேசத்தில் தேர்தலே நடக்காது. ரஷியா, சீனாவில் என்ன நடந்ததோ அதை நோக்கி தேசம் செல்லும். தேசத்தில் ஒரு கட்சி, ஒரு கொள்கை, விதிமுறைகள் மட்டுமே இருக்கும், யார் குடியரசு தலைவராக வர வேண்டும் அல்லது இந்;தியத் தiமை அமைச்சராக வர வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ போல, ஹிந்துத்துவா பொலிட்பீரோவினர்தான் முடிவு செய்வார்கள்.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரகங்களை தவறாகப் பயன்படுத்தி, வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஆதரவை தனது கட்சிக்காக மோடி பெறுகிறார். ஜனநாயகத்தில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். ஆனால், பாஜக தலைவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இல்லை, எதிர்க்கட்சியினர் யாரும் கேள்வி கேட்பதை அவர்கள் விரும்புவதில்லை. சகிப்புத்தன்மை என்பதே அவர்களின் மரபணுவில் இல்லை. இவ்வாறு அசோக் கெலாட் பேசினார்.

இதழியலாளர்கள் என்றால் அஞ்சி அஞ்சி ஓடி, உலகம் முழுவதும் தேடி தேடி சுற்றிவரும் மோடி, ஓ அந்த நாடுகளின் அரசமைப்பு முறைகளைக் கற்றுக் கொள்வதற்குதானோ என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.