Show all

காவிரி விவகாரப் போராட்டம் வலுவடைந்தால் 11 தமிழர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தடை வரலாம்

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்மையளிக்கும், நடுவண் அரசு திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புகளை தடை செய்வதற்கான காரணங்களை கண்டறிந்து கூறுமாறு உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்க திட்டம், மீத்தேன், நியூட்ரினோ என தமிழகத்தை சோமாலியாவாக்கும், கார்ப்பரேட்டுகளுக்கு நன்மையளிக்கும் திட்டங்களை, தமிழகத்தில் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு மோடியின் அடிப்படை புரியாமல். சிறிய போராட்டத்துடன் அமைதியாக இருந்த மக்கள், இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளின் நன்மைக்காக தமிழகத்தை சோமலியா ஆக்கும் முயற்சியே தமிழகத்தில் மேற்கொள்ளும் மோடி அரசின், ஒவ்வொரு திட்டமும் என்று புரிந்து கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் கடுமையாக எதிர்த்து தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் திடீர் மாற்றத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யுமாறு உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பேரில் உளவுப்பிரிவு காவல்துறையினர் ஓர் ஆய்வு நடத்தி, ஒரு அறிக்கையையும் மோடி அரசுக்கு அனுப்பியுள்ளனர். அதில், 'பூவுலகின் நண்பர்கள், மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, மக்கள் கலை இலக்கிய கழகம், மக்கள் அதிகாரம் உட்பட 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றனர். நடுவண் அரசு திட்டங்களில் உள்ள அபாயங்களை தமிழ் மக்களிடம் அறிவியல் விளக்கத்துடன் கூறுகின்றனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே சில தகவல் தொழில் நுட்ப ஊழியர்களும் உள்ளனர். இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்தினால் மக்கள் போராட்டங்கள் நடத்துவது 90 விழுக்காடு குறைந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.

உளவுப்பிரிவு காவல்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்த நடுவண் அரசு அதிகாரிகள், இந்த அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடித்து தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். 

அதனைத் தொடர்ந்து மோடி அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான மோசடிகளை அம்பலப் படுத்தி வரும்  மோடியின் மோசடி அரசியலுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைக் கண்காணிக்கும் பணியில் நடுவண் உளவுப்பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த 11தமிழர் பாதுகாப்பு  அமைப்புகளை செயல்படவிடாமல் தடுக்க வேண்டும் அல்லது அமைப்பையே தடை செய்ய வேண்டும். இதற்கான சட்டரீதியான சூசகங்களைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு உளவுப்பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மோடி அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான மோசடிகளை அம்பலப் படுத்தி வரும் 11 அமைப்புகளையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் உளவுப்பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,744.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.