Show all

இந்தியா இருவருக்கு மட்டுமே! ஆட்சி ஒருவருக்கு, அனைத்தும் மற்றவருக்கு. எவர்? எப்படி?

இந்தியா இருவருக்கு மட்டுமே! ஆட்சி ஒருவருக்கு, அனைத்தும் மற்றவருக்கு: என்பதான பீதியைக் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய மக்களிடம் கிளப்பி வருகின்ற இருவர் ஒருவர் மோடி, மற்றவர் முகேஷ் அம்பானி. மோடி தொல்லை தரும் தொடரா? முற்றுமா? என்பதை இன்னும் முப்பத்தியிரண்டு நாளில் தெரிந்து விடும். முகேஷ் அம்பானி திகில் தொடராகவே இருந்து வருகிறார். ஆம்! ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடன் மற்றும் நிதி நெருக்கடியால் திவாலாகி விட்ட, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய இரு விமான போக்குவரத்து நிறுவனங்களும்  கடந்த ஆண்டு  முதல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இரு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளது. 
கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் புதன்கிழமையன்று தற்காலிகமாக விமான போக்குவரத்து சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 
தொழிலை நடத்த தற்காலிகமாக ரூ.983 கோடி அவசர தொகையாக வங்கிகளிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரியது. எனினும், நிதி வழங்க வங்கிகள் மறுத்ததால் விமான போக்குவரத்து சேவைகள் முடங்கின.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எடிஹாட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எடிஹாட் நிறுவனத்துக்கு 24 விழுக்காடு பங்குகள் உள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்க எடிஹாட் நிறுவனமும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளது. அதனுடன் இணைந்து முகேஷ் அம்பானியும் கூட்டாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.