Show all

வயநாட்டில் மோடியைத் தொங்க விட்ட அசத்தல் பேச்சு! சொந்தக்காரர்கள் பிரியங்கா காந்தியும், ஜோதி விஜயலட்சுமியும்

காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி, அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று கருத்துப்பரப்புதல் செய்தார். அதை மலையாளத்தில் அழகாக மொழிபெயர்த்து கேரளமக்களிடம் கொண்டு சேர்த்தார் ஜோதி விஜயலட்சுமி
08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் நேற்று கருத்துப்பரப்புதல் செய்தார். தனது பேச்சில் மோடியை சற்று அதிமாகவே தாக்கிப் பேசினார் பிரியங்கா காந்தி.
'நான் உலங்கு வானூர்தியில் வரும்போது, வயநாட்டின் அழகைக் கண்டு பிரமித்தேன். இங்குள்ள பழங்குடிகளின் கலாசாரத்தை நான் மதிக்கிறேன். பல்வேறு தரப்பு மக்கள் இருந்தாலும், ஒற்றுமையாக வாழ்வதில் வயநாடு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறது. உத்தரப்பிரதேசமும் நம் தேசம்தான். கேரளாவும் நம் தேசம்தான். தமிழகமும் நம் தேசம்தான். அதனால்தான், ராகுல் இங்கு போட்டியிடுகிறார். நான் பிறந்ததில் இருந்து, பார்த்துவரும் நபருக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வளவோ விமர்சனங்களை ராகுல் கடந்து வந்துள்ளார்.
பாஜக மக்களின் பேரதரவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. மக்கள், பாஜகவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், ஆட்சியில் அமர்ந்த அந்த நொடியில் இருந்து பாஜக அந்த நம்பிக்கையைப் தகர்க்கத் தொடங்கி சிறப்பாக முடிவு நிலைக்கு வந்திருக்கிறது. 
மக்களிடம் பிரிவினையைத் தூண்டிவிடுவதுதான் தேசியமா? உரிமைகளுக்காகப் போராடும் உழவர்களையும், மக்களையும் சிறைக்கு அனுப்புவதும்தான் தேசியமா? 
ஐந்து ஆண்டுகளில், மோடி ஒரு முறைகூட தனது தொகுதியில் கால் வைக்கவில்லை. பாஜகவைப் போல பலவீனமான அரசையோ, மோடியைப் போல பவவீனமான தலைமைஅமைச்சரையோ நான் இதற்கு முன்பு கண்டதில்லை' என்று ஆவேசமாகப் பேசினார், பிரியங்கா காந்தி.
ராகுல் காந்திக்கு மொழிபெயர்த்து கவனம் ஈர்த்த ஜோதி விஜயகுமார், இன்று பிரியங்காவுக்கு மொழிபெயர்ப்பு செய்தார். பிரியங்கா பேசி முடிக்கும் அடுத்த நொடியே, அதே மொழி நடையில் ஜோதி விஜயகுமார் மொழிபெயர்க்க, மக்களிடம் கைத்தட்டல் அள்ளியது. இதனால், பிரியங்கா மிகுந்த ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஜோதி விஜயகுமாரைப் பார்த்தார்.
ஜோதி விஜயகுமார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பத்தனாபுரம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்தவரும் இவரே. 
தேசியப் பிரச்னைகள், மாநிலப் பிரச்னைகள் ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொண்டு, உடனுக்குடன் மொழிபெயர்த்தது மக்களை வெகுவாகக் கவர்ந்தது.
'இராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தியாவைக் குறித்து அவர் பேசிவரும் கருத்துகள் என் மனத்தின் ஆழத்தில் பதிந்திருந்தது. ராகுல் காந்தி எங்கு பேசினாலும் அதை நான் தவறவிட்டதில்லை. அவர் பேசும் சொற்கள் ஒவ்வொன்றும் என் மனதில் பதிந்திருந்தது. அதைத்தான் மக்கள் மனத்தில் பதியவைத்தேன்.' என்று பிரியங்கா மற்றும் இராகுலுக்கு தனது மொழிபெயர்ப்பு குறித்து நெகிழ்ந்து பேசுகிறார் ஜோதி விஜயகுமார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,129.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.