Show all

ஜியோவுக்கு கெத்து இல்லையா! ஏர்டெல், வோடபோன்-ஐடியா கூட்டணியோடு பெரு நகரங்களில் போட்டி போட

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காலாண்டு நிறைவில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த ஏ.ஜி.ஆர். விகிதம் 15.9விழுக்காடு மட்டுமே. ரிலையன்ஸ் ஜியோவை வீழ்த்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பேசி 2 செல்பேசியை வெறும் 500 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. 

இந்நிலையில், முடிந்த காலாண்டில் ஏ.ஜி.ஆர். விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது பெரு நகரங்களில் ஜியோ நிறுவனம் சரிவைச் சந்தித்துள்ளது. காலாண்டு நிறைவில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த ஏ.ஜி.ஆர். விகிதம் 15.9விழுக்காடு மட்டுமே. 

ஆனால், ஏர்டெல் நிறுவனத்தின் ஏ.ஜி.ஆர். விகிதம் 3விழுக்காடு குறைந்தாலும் பெரு நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் முறையே 20.5விழுக்காடு மற்றும் 21.6விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதேபோல வோடபோன்-ஐடியா நிறுவனமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றது. அந்நிறுவனத்தின் மொத்த ஏ.ஜி.ஆர். விகிதம் 6.2விழுக்காடு வீழ்ச்சி கண்டாலும், டெல்லியில் 27.3விழுக்காடு உயர்வை அடைந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.