Show all

திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயன்ற, பாஜக முயற்சி முறியடிப்பு!

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாயலத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஸ்டாலின் தோழமை கட்சிகளோடு இணக்கமாக உள்ளதாக தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரசும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் மட்டுமே இருப்பதாக அதன் பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்ததாக, பாஜக சில ஊடகங்களோடு  தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில், மதிமுக சார்பில் நடைபெறவிருக்கும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகனும் உடன் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது, ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரனை சந்தித்தேன், அதற்கும் தேர்தல் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

ஸ்டாலின் தோழமை கட்சிகளை இணக்கமாக நடத்தி வருகிறார். அதில் எவ்வித சிக்கலும் இல்லை. அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக, திமுக அணியை பலவீனப்படுத்தும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது என்று கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், துரைமுருகன் எதிர்காலத்தில் மதிமுக, விசிக கூட்டணியில் இருக்காது என்று கூறவில்லை. விரைவில் திமுக கூட்டணி முழுமைபெறும்' என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,985.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.