Show all

பாஜகவின் சவுக்கிதார் கருத்துபரப்புதல்- பாஜகவினர் இயல்பு அல்ல! வெறுமனே நாடகமே என அம்பலப் படுத்திய சுப்பிரமணியசாமி

தமிழர் அடிப்படைகள் உலகின் எந்த மூலையிலும் முன்னெடுக்க முடியாமல் தடுக்க உலகளாவி ஓர் ஆரியர் அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பு உலகம் முழுவதும் ஆரிய உறங்கும் விதைகளை அதிகாரத்தில் பரவ விட்டிருக்கிறது. அந்த உறங்கும் விதைகளில் அடிக்கடி முளைப்பு கட்டி அதிரடி காட்டும் ஒரு நபர்தான் இந்த சுப்பிரமணியசாமி. அந்த சுப்பிரமணிய சாமி பாஜக சவுக்கிதார் நாடகத்தில் தனக்கு உடன்பாடில்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கிறது

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான் பாதுகாவலனாக முடியாது, ஏனென்றால் நான் பிராமணன் என சுப்பிரமணியன்சாமி வழக்கமான அதிரடி காட்டி பேசியுள்ளார். நானும் சவுக்கிதார்தான் என்ற ஒரு கருத்துப்பரப்புதல் இயக்கத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கீச்சுவில் சவுக்கிதார் (பாதுகாவலன்) நரேந்திர மோடி என பெயரை மாற்றியுள்ளார். இவரை போலவே அமித்ஷா, அருண்ஜேட்லி, பியூஷ் கோயல் , தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் தனது பெயருக்கு முன்னால் சவுக்கிதார் என மாற்றியுள்ளனர். 

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சவுக்கிதார் என்ற பெயர் மாற்றத்தை கட்சியினர் செய்து வர நீங்கள் மட்டும் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு சுப்பிரமணியன்சாமி பதில் அளிக்கையில் நான் ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் பாதுகாவலன் ஆக முடியாது. பிராமணர்கள் பாதுகாவலர்களாக முடியாது. 

நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும். இதைதான் சவுக்கிதார்களிடம் எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதனால் நான் சவுக்கிதாராக முடியாது என சுப்பிரமணியன்சாமி கூறியுள்ளது வழக்கமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நான் சொல்லும் பணிகளை நிறைவேற்றுவதே பாதுகாவலர்களின் பணியாகும் என்று கூறியதன் மூலம் சவுக்கிதார்கள் என்றால் பணியாளர்கள். பாஜகவினர் யாரும் பணியாளர்களாக செயல்படும் இயல்பினர் அல்லர். அதனால் இந்த சவுக்கிதார் நாடகம் பாமர மக்களை ஏமாற்றும் மோசடி என்பதை அம்பலப் படுத்தியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.