Show all

மோடியைத் தோற்கடியுங்கள், இல்லையேல் இந்தியாவில் இனி தேர்தலே நடக்காது: கெஜ்ரிவால்

இந்தத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்தாக வேண்டும். விட்டு விட்டோமானால் தனது அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்தியாவில் தேர்தலை முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் மோடி. அப்புறம் ஹிட்லர் காலத்து செருமானியம்தான் இந்தியா என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் மக்கள் விரோதத் திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெற்றது. அதில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

தற்போதைய நிலையிலேயே மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும், 'தேச விரோதி' என்று முத்திரை குத்துகிறார்கள். டெல்லி அருகே குர்கானில் ஒரு முஸ்லிம் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல், சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மோடி அரசு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கையை பின்பற்றுகிறது.

இந்த தேர்தலில், என்ன விலை கொடுத்தாவது மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுப்பதே ஒவ்வொரு தேச பக்தரின் நோக்கமாக இருக்க வேண்டும். மோடியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

ஒருவேளை, மோடி மீண்டும் தலைமை அமைச்சர் ஆக்கப் படுவாரேயானால், மோடிக்கு எதிரானவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்பதை மக்கள் அங்கிகரித்ததாகி விடும். அந்த மாபெரும் அதிகாரத்தில் அதன்பிறகு இந்தியாவில் தேர்தலே நடத்தப்படாது. மோடியே இந்தியாவின் நிரந்தர அதிபர் போல எப்போதும் இருப்பார்.

இந்தியாவின் குடிஅரசு இறையாண்மை  முடிவுக்கு வந்து விடும். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,102.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.