Show all

சீனா ஒரு காரணம்! ஒரே நாளில் ஒரு இந்திய கிராமத்தில் முப்பத்தியொரு கோடீசுவரக் குடும்பங்கள்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்திய எல்லை பகுதியில் ராணுவம் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதன்மையாக தற்போது இந்தியாவிற்கு பாகிஸ்தானை விட சீனாதான் தொல்லையாக மாறியுள்ளது. இதன் காரணமாக அருணாசலப்பிரதேச எல்லையில்தான் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது அங்கு இருக்கும் ராணுவத்தால் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் கோடீசுவரர்கள் ஆகியுள்ளார்கள். போம்ஜா என்ற அந்தக் கிராமத்தில் இருக்கும் எல்லோரும் இப்போது கோடீசுவரர்கள். இதற்குப் பின் அழகான வரலாறு ஒன்று இருக்கிறது.

போம்ஜா பகுதியில் இந்திய ராணுவம் கடந்த 5 ஆண்;டுகளுக்கு முன்பு ராணுவ அமைவிடம் உருவாக்க நிலம் வாங்கியது. இதற்காக மொத்தம் 200 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்க இந்த நிலம் வாங்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.

ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இருக்கும் விலை என்னவோ அந்தத் தொகை நில உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.

அங்கு 31 குடும்பங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 40.8 கோடி செலவாகி இருக்கிறது. இதில் அதிகமாக ஒரு குடும்பம் 6.73 கோடி வாங்கியுள்ளது. இன்னொரு குடும்பம் 2.45 கோடி வாங்கியுள்ளது. இன்னும் 29 குடும்பங்கள் 1.09 கோடி வாங்கியுள்ளன.

இதனால் தற்போது அந்தக் கிராமம் தான் இந்தியாவில் பணக்கார கிராமம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதேபோல் அந்தக் கிராமத்தில் மட்டுமே தற்போது அதிக கோடீசுவரர்கள் இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,693

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.