Show all

செரிமானக் கோளாறு சரியானதால் உண்ணாநிலையை முடித்துக் கொண்டாரா! ஜீயர்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தியதாக புரிந்து கொண்டவர்களில் சடகோப ராமானுஜர் ஜீயரும் ஒருவர். அவர் குருகுலக் கல்வியில் சம்சுகிருதம் படித்திருப்பார். இலக்கியத் தமிழை அவரால் புரிந்து கொள்ள முடியுமா என்பதே ஐயம் தான். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவலில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நேற்று முதல் மீண்டும் உண்ணாநிலை தொடங்கியவர் சற்று முன் தன் உண்ணாநிலையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளாராம்.

ஆண்டாள்- வைரமுத்து சர்ச்சை தொடக்க நிலையில் ஜீயரின் போராட்டத்துக்கு ஹிந்து அமைப்புகள் ஆதரவு கொடுத்தன. இதனால் பல ஊர்களுக்குச் சென்று போராட்டம் நடத்தினார். இடையில் சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று அவர் பேசியது கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது. இந்த நிலையில் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்க கடந்த சனிவரை கெடு விதித்தார் ஜீயர். அதற்கு வைரமுத்து எந்த பதிலும் சொல்லாததால் சனிக்கிழமை ஜீயர் வெளியூர் சென்று பல பிரமுகர்களைச் சந்தித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பத்து மணிக்கு திருவில்லிபுத்தூர் செருக்கூர் திருமண மண்டபத்தில் உண்ணாநிலையைத்; தொடங்கினார் ஜீயர். இவர் உண்ணாநிலை இருக்கும் தகவல் தெரிந்தும், பொதுமக்களோ, சமூக அமைப்புகளோ, ஹிந்து இயக்கங்களோ யாரும் வரவில்லை. மடத்திலிருக்கும் சிலர் மட்டும் அவருடன் உண்ணாநிலை மேற்கொண்டனர்.

மேலும் அவர் உண்ணாநிலை இருப்பதை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள். நேற்று தூத்துக்குடி வந்த சாமித்தோப்பு அய்யா வழி பாலபிரஜாபதி அடிகள், செரிமானக் கோளாறால் ஜீயர் உண்ணாநிலை இருக்கிறார் என்று விமர்சித்தார்.

இன்னும் சில மடாதிபதிகளும் விமர்சித்தனர். இந்நிலையில் அவர் உண்ணாநிலை இருக்கும் மண்டபம் வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் திருமணத்துக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மண்டபத்தை வழங்கவில்லை என்றால் பிரச்னை ஆகும் என்பதால், உண்ணாநிலையைத் தொடர்வதா, முடிப்பதா என்ற குழப்பத்தில் ஜீயர் இருந்து வந்தார்.

இன்று காலை அவரைக் காண பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வந்த நிலையில் அப்பாடா சாக்கு கிடைத்ததோ தப்பித்துக் கொண்டோமோ என்று உண்ணாநிலையை முடித்துக் கொண்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,693

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.