Show all

தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள்

தொலைபேசி இணைப்பு வழக்கில் தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் கோபால் கவுடா அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. தயாநிதிமாறனை சிபிஐ கைது செய்வதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணைக்கு 5 முறை ஆஜராகி தயாநிதிமாறன் பதில் அளித்துள்ளார். சிபிஐ-க்கு விரிவான கடிதம் மூலம் 2 முறை பதில் தந்துள்ளதாக தயாநிதி வழக்கறிஞர் வாதம் நடத்தினார்.

பின்னர் சிபிஐ முன்னுக்குப்பின் முரணாக கூறி வருவதாக தயாநிதி மாறன் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். நவ.30 முதல் டிச.5 வரை சிபிஐ முன் ஆஜராகி தயாநிதிமாறன் பதில் அளிப்பார் என்றும்; தயாநிதிமாறனிடம் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை சிபிஐ அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக தயாநிதி தரும் பதிலை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.