Show all

2.0 முன்பதிவில் இருக்கைகள் நிறைந்தன! வியாழக்கிழமை வெளியாகும், பிரமாண்டத் தயாரிப்பாளர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்த் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற படம் எந்திரன். 

இப்படத்தின் அடுத்த படைப்பாக சங்கர் இயக்கத்தில் 2.0 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சைகுமார் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

படம் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இன்று காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் படத்திற்கான முன்பதிவு நேற்று நள்ளிரவு தொடங்கியது. சென்னையைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் காசி டாக்கீஸ் மற்றும் மாயாஜால் திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது. அனுமதிச்சீட்டு முன்பதிவு தொடங்கியதுமே இருக்கைகள் அனைத்தும் விறுவிறுவென முன்பதிவு செய்யப்பட்டன.

தொடர்ந்து இன்று காலை பத்து மணியளவில் மற்ற திரையரங்கமங்களுக்கும் 2.0 திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியது. சத்யம், எஸ்கேப் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் காலை, மதியம், மாலை, இரவு என அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,982.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.