Show all

10, 12 மாணவர்களுக்கு மறுதேர்வு! பொறுப்பில்லாத நிருவாகம்- அவதிப்படும் மாணவர்களும், பெற்றோர்களும்

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியம் (நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறதே அந்த வினாய் போன வாரியம்தான்) வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி விட்டது என்று கூறி 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவித்துள்ளது. 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். 

தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியில் இருந்த 10-ம் வகுப்பு மாணவர்களால், இதை செரிமானம் செய்ய முடியவில்லை. வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்களாம். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம்.

மறுதேர்வு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொறுப்பற்ற அதிகாரிகள், பொறம்போக்குகளை வைத்துக் கொண்டு, மோடி மாநில அதிகாரங்களையெல்லாம் பிடுங்கி பிடுங்கி இந்த அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. முதலில் நடுவண் அரசு நிருவாகக் கட்டுமானங்களை ஒழுங்கு மற்றும் நேர்மை படுத்துங்கள். அப்புறம் மற்றவன் அதிகாரத்தைப் பிடுங்கலாம். 

காகித பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் வங்கிகளுக்கு அதிக அதிகாரம் கொடுத்து விட்டு இன்றைக்கு ஊழல் நாற்றம் ஒவ்வொரு வங்கியாக வெளிக் கிளம்பிக்;; கொண்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.