Show all

காவிரி மேலாண்மை வாரியம் பெற்றேயாக வேண்டும் என்பதற்கான, தெளிவான போராட்டம் இன்னும் வடிவம் பெறவில்லை

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி அரசின் அறங்கூற்றுமன்ற அவமதிப்பு, தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இன்னும் தெளிவான போராட்டம் வடிவம் பெறவில்லை.

மோடி அரசு- தெரிந்தே, தெளிவாக, திட்டமிட்டு, எந்தக் காலத்திலும் தம்கட்சிக்கான வாக்கு வங்கியாக அமைய வாய்ப்பே இல்லாத, தமிழகத்தை சோமாலியாவாக  ஆக்குவதற்கு தமிழகத்திலிருந்தே சில கருங்காலிகளை உள்ளடி ஆட்களாக நியமித்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, நீட்தேர்வு, ஸ்டெர்லைட், செயல்பாடுகளையும் மற்றும் கீழடி ஆய்வு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பு போன்றவற்றில் முடக்கத்தையும் தெளிவாக காய் நகர்த்தி வருகிறது.   

எல்லாவற்றுக்கும் எதிராக  ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. ஆனாலும் காவிரி மோலாண்மை வாரியத்தை அமைக்க வைக்க முடியுமா என்பதே பலருக்கும் கேள்விக் குறியாக இருக்கிறது. இந்த நிலையில், ஏனோதானோ வென்று தமிழகக் கட்சிகள் ஏதாவது செய்ய வேண்டுமே என்று சிலவற்றை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையாக- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து இன்னும் பதினைந்து நாளில் தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(அப்படியானால், காவிரி மோலாண்மை வாரியம் அமைப்பதில் இன்னும் பதினைந்து நாளில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்றே திமுக நம்புகிறதா!)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் கெடு விதித்தும் அதை மோடி அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நடுவண் அரசை கண்டித்து வரும் திங்கட் கிழமை- அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளன.

இதனிடையே காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டம் முடிந்தவுடன் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி நடுவண் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். காவிரிக்காக பதவி விலகிட அதிமுகவுக்கு துணிச்சல் இல்லை.

தமிழகத்துக்கு இன்னும் பதினைந்து நாளில் (அறங்கூற்று மன்ற அவமதிப்பு குற்றம் மேற்கொண்டவராக) வருகை தரும்  மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் ஸ்டாலின்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.