Show all

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ரூ 49.45 கிடைக்கும்! சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள இந்தியர்களின் கருப்புப்பண மீட்பில்

ஒரு வழியாக, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் யார் யாருடைய பணம் உள்ளது என்பதும், அந்தப் பணத்தையெல்லாம் மீட்டு இந்தியக் குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் 49ரூபாய் 45 காசுகள் கொடுக்க முடியும் என்றும் தெரிய வந்துள்ளது.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து நடுவண் வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் ரூ.6,757 கோடி என அந்த நாட்டு நடுவண் வங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியிட்டு இருந்தது. 


கடந்த ஆண்டில் அந்த நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் மதிப்பு 955 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.6,757 கோடி) ஆகும். 

இதைப்போல சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தானை சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணமாக 744 மில்லியன் சுவிஸ் பிராங் (சுமார் ரூ.5,300 கோடி) கடந்த ஆண்டில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான ஒப்பந்தத்தின்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின், முதல் பட்டியல் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள், கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக விளங்குவதாகவும் அதை மீட்டால் நம் நாடு செர்க்கமாக மாறி விடும் என்றும், நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் கருத்து சொல்லப் பட்டு வருகிறது.  

நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர், சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும், மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், இந்தக் கறுப்பு பணத்தை மீட்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பட்டியலை அந்நாடு இந்தியாவுக்கு அளித்துள்ளது. சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து, யாரேனும் தங்கள் வருவாயை மறைத்திருந்தால் இப்பட்டியல் மூலம் கண்டறிய முடியும்.

பட்டியலில், தற்போது செயல்நிலையில் இருக்கும் கணக்குகள் மட்டுமன்றி, கடந்த ஆண்டு வரை மூடப்பட்ட கணக்குகளின் விவரங்களும் கிடைத்துள்ளன. இரண்டாவது பட்டியல் அடுத்த ஆண்டில் இந்தியாவுக்கு வழங்கப்படுமாம்.

இந்தப் பணத்தை மீட்டுதான் ஒவ்வொருவர் கணக்கிலும் 15இலட்சம் போடப்படும் என்றெல்லாம் பாஜக கருத்து தெரிவித்து, தற்போது மறுப்பு தெரிவித்தும் வருகிறது.

கடந்த முறை பாஜக பதவியேற்ற போது, இந்தியாவின் கடன்  54,90,763 கோடி ரூபாயாக இருந்தது என நிதி அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. அதுவே கடந்த ஆண்டு வரையில் இந்தியாவிற்கு உள்ள கடன் 82,03,253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் தெரிய வருகிறது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணமோ வெறுமனே ரூ.6,757 கோடி அதாவது இந்தியா வாங்கியுள்ள கடனில் ஆயிரத்தில் ஒரு மடங்கு தொகையைத்தான் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் சேமித்து வைத்திருக்கின்றனர் என்பதாக தெரியவருகிறது. இந்தத் தொகையை வைத்து இந்தியக் கடனுக்கு ஒரு மாத வட்டியைக் கூட முழுமையாக செலுத்த முடியாது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் முகேஷ் அம்hபானியின் சொத்து பதினைந்து இலட்சம் கோடி. இரண்டாவது பணக்காரர், திலிப்சங்வியின் சொத்து பதினோரு இலட்சம் கோடி. 
மூன்றாவது பணக்காரர் ஹிந்துஜா சகோதரர்களின் சொத்து பத்து இலட்சம் கோடி.
நான்காவது பணக்காரர் அசிம் பிரோம் சொத்து பத்து இலட்சம் கோடி.
ஐந்தாவது பணக்காரர் பல்லோன் பிஸ்திரி சொத்து ஒன்பது இலட்சம் கோடி.
ஆறாவது பணக்காரர் இலட்சுமி மிட்டல் சொத்து எட்டு இலட்சம் கோடி.
ஏழாவது பணக்காரர் கோத்ராஜ் சொத்து எட்டு இலட்சம் கோடி.
எட்டாவது பணக்காரர் சிவநாடார் சொத்து ஏழரை இலட்சம் கோடி
ஒன்பதாவது பணக்காரர் குமார் பிர்லா சொத்து ஆறுஇலட்சம் கோடி.
பத்தாவது பணக்காரர் சைரஸ் பூனவாலா சொத்து ஆறு இலட்சம் கோடி.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.6,757 கோடி.

இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இதை பிரித்துக் கொடுத்தால் தலைக்கு ரூ 49.45 காசுகள் கிடைக்கும்.

இந்தியாவின் கடனை இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் பிரித்தால் உங்கள் தலை மீது இந்திய அரசு சுமத்தியுள்ள கடன். ரூ. 60,034.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,298.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.