Show all

காலமானார் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி!

தவசி படத்தில் பின் லேடனின் வீட்டிற்கு வழி கேட்கும் காட்சியில் நடித்து திரைப்பட ரசிகர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று காலமானார்.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, தவசி படத்தில் பின் லேடனின் வீட்டிற்கு வழி கேட்கும் காட்சி திரைப்பட ரசிகர்கள் நடுவே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தன் நகைச்சுவைகளுக்காக தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் இவர்.

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, படப்பிடிப்புக்காக தேனி அருகே உள்ள குமுளிக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர். 

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,298.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.