Show all

ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டதில் ஆட்சியாளர்கள் முறைகேடு

பா.ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்தில் ஆனந்தி பென் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 58 ஏரிகளில் மீன் பிடிக்க காண்டிராக்ட் விடப்பட்டது. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடுக்கு வழி வகுக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் இசாக் மராடியா புகார் கூறினார்.

இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். மீன்பிடி குத்தகையில் ரூ.440 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறிய அவர் அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இந்த ஊழல் தொடர்பாக தற்போது குஜராத்தில் கால் நடைத் துறை மந்திரியாக இருக்கும் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் மந்திரி திலிப் சங்கானி மற்றும் 5 ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீன்பிடி குத்தகை விடுவதில் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேண்டியவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2014-ம் ஆண்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு ஆமதாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு விசேஷ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை அறிக்கை மூலம் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வருவதால் தற்போதைய மந்திரி புரு ஷோத்தம் சோலங்கி, முன் னாள் மந்திரி திலிப் சங்கானி மற்றும் 5 முன்னாள் அதி காரிகள் மீது லஞ்ச ஊழல் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி ரிஸ் வானா கோகாரி உத்தர விட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து குஜராத் மாநில பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குற்றச் சாட்டுக்கு ஆளான மந்திரி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.